வாலிபர், குண்டர் சட்டத்தில் கைது

ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-14 18:45 GMT

வலங்கைமான் அருகே வேப்பத்தங்குடி கீழத்தெருவை சேர்ந்த சங்கர் மகன் விஜய் (வயது23). இவர் மீது, அரையூர் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் கொலை வழக்கு உள்ளது. மேலும் விஜய் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் பரிந்துரை செய்தார். அதன் பேரில் விஜயை, குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் வலங்கைமான் போலீசார், குண்டர் சட்டத்தின் கீழ் விஜய்யை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்