போக்சோ வழக்கில் கைதான வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
போக்சோ வழக்கில் கைதான வாலிபருக்கு 3 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.
நெல்லை அருகே பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரத் சந்திரன் (வயது 25). இவரை கடந்த 2019-ம் ஆண்டு 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட சரத் சந்திரனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.