வீடுபுகுந்து திருடிய வழக்கில் வாலிபர் கைது
சோளிங்கர் அருகே வீடுபுகுந்து திருடிய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சோளிங்கரை அடுத்த நீலகண்டராயன்பேட்டை ரைஸ் மில் பகுதியை சேர்ந்தவர் கல்பனா (வயது 45). கடந்த மாதம் 21-ந் தேதி இவரது வீட்டில் பிரோவை உடைத்து ரூ.1½ லட்சம் பணம் மற்றும் 1½ பவுன் நகை, கொலுசை பக்கத்து வீட்டில் வசிக்கும் அஜித்குமார் என்பவர் திருடிச் சென்றதாக சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அஜித்குமாரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நீலகண்டராயபுரம் மலைப்பகுதியில் அஜித்குமார் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்- இன்ஸ்பெக்டர்கள் ரவி, மோகன் மற்றும் போலீசார் மலைப்பகுதிக்கு சென்ற போது அங்கிருந்து அஜித்குமார் தப்பி ஓடி உள்ளார். அவரை ஜேம்பு குளம் கூட்ரோடு அருகே போலீசார் மடக்கி பிடித்து அவரிடம் இருந்து ரூ.75 ஆயிரம் ரொக்க பணம், நகை மற்றும் கொலுசு ஆகியரற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.