செல்போன்களை பறித்த வழக்கில் வாலிபர் கைது
செல்போன்களை பறித்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி காந்தி மார்க்கெட் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் விஷ்வா (வயது 19). சம்பவத்தன்று இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி விஷ்வாவிடம் இருந்த செல்போனை பறித்து சென்றார். இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியின் அடிப்படையில் நேற்று அதிகாலை செல்போன் திருடிய நபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் கொடைக்கானல் யூனிவர்சிட்டி ரோடு 5-வது தெருவை சேர்ந்த கிருபாகரன் என்கிற கிருபாகுமார் என்பது தெரியவந்தது. மேலும் இவர் திருச்சி பொன்மலை மேலஅம்பிகாபுரம் பகுதியில் வீடு எடுத்து தங்கி பலரிடம் செல்போன்களை பறித்து சென்றவர் என தெரியவந்தது. மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.