கஞ்சாவுடன் பதுங்க முயன்ற வாலிபர் கைது
கஞ்சாவுடன் பதுங்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கஞ்சாவுடன் பதுங்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள புது ஓட்டல் தெரு பகுதியில் வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் பதுங்க முயன்றவரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அந்த வாலிபர் ஜோலார்பேட்டையில் உள்ள இடையம்பட்டி, ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்த டேவிட் என்பவரின் மகன் விமல் ராஜ் (வயது 37) என்பதும் விற்பனைக்காக கஞ்சாவைத்திந்ததும் தெரிய வந்தது. இதனையெடுத்து விமல்ராஜை போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.