பயணியிடம் செல்போன் பறிக்க முயன்ற வாலிபர் கைது

பயணியிடம் செல்போன் பறிக்க முயன்ற வாலிபர் கைது

Update: 2023-03-28 18:38 GMT

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே உள்ள அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 30). இவர் ராமநாதபுரத்திலிருந்து சென்னை செல்வதற்காக ரெயில் நிலையத்திற்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் செல்போன் பேசிக்கொண்டு நின்று கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து அங்கு வந்த ஸ்ரீகாந்த் (21) என்பவர் கண் இமைக்கும் நேரத்தில் முருகேசன் பேசிக்கொண்டிருந்த செல்போனை பறிக்க முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த முருகேசன் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்த பயணிகள் விரைந்து வந்து ஸ்ரீகாந்தை மடக்கி பிடித்தனர். இது பற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் நகர் போலீசார் அங்கு விரைந்து சென்று ஸ்ரீகாந்தை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்