எக்ஸ்பிரஸ் ரெயிலில் 12 கிலோ கஞ்சா கடத்தல் வாலிபர் கைது

எக்ஸ்பிரஸ் ரெயிலில் 12 கிலோ கஞ்சா கடத்தல் சென்டிரல் ரெயில் நிலையத்தில் வாலிபர் கைது.

Update: 2023-02-05 18:42 GMT

சென்னை,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துக்குமார், இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் ரெயில்வே போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் 10-வது நடைமேடையில் வந்து நின்றது. ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகளில் சந்தேகப்படும் படியாக ஒருவர் இறங்கி வந்ததை போலீசார் கண்டனர். உடனடியாக அவரை மடக்கிப்பிடித்த போலீசார், அவரது பையை சோதனையிட்டனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் 12 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் அவர் மயிலாப்பூரை சேர்ந்த ஷியாம் பிரசாத் (வயது 23) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து பறிமுதல் செய்த கஞ்சா பொட்டலங்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்