மாணவிக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பிய வாலிபர் கைது
மாணவிக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருமங்கலம்,
திருமங்கலத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியை, திருச்சி அண்ணா நகரை சேர்ந்த ராகுல் (வயது 22).என்பவர் மேலூரில் உறவினர் திருமணத்திற்கு சென்ற போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த மாணவியின் செல்போன் நம்பரை வாங்கி உள்ளார். இந்நிலையில் அவர் மாணவியின் செல்போனுக்கு ஆபாச படம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக மாணவியின் தாய் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் வாலிபர் ராகுலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.