ஆன்லைனில் லாட்டரி விற்ற வாலிபர் கைது
கன்னியாகுமரியில் ஆன்லைனில் லாட்டரி விற்ற வாலிபர் கைது
கன்னியாகுமரியில் ஆன்லைன் மூலம் கேரளா உள்ளிட்ட வெளி மாநில லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கன்னியாகுமரி சப்- இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் தலைமையில் போலீசார் சர்ச் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் தூத்துக்குடி மாவட்டம் பிரைம் நகரை சேர்ந்த முகமது அசாருதீன் (வயது23) என்பதும், ஆன்லைன் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்று வந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் ஆன்லைன் லாட்டரி விற்பனைக்காக பயன்படுத்திய 2 செல்போன்கள் மற்றும் ரூ.13 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.