மோட்டார் சைக்கிளில் மதுவிற்ற வாலிபர் கைது

Update: 2023-07-01 18:45 GMT

மோகனூர்

மோகனூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மோகனூர் சப்-இன்ஸ்பெக்டர் இளைய சூரியன் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோகனூர் தெற்கு தெருவில் இருந்து வாய்க்கால் செல்லும் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதை தொடர்ந்து அவரது மோட்டார்சைக்கிளை சோதனை செய்தனர். அப்போது மதுபானத்தை அதிக விலைக்கு விற்பதற்காக மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து மோகனூர் தெற்கு தெருவை சேர்ந்த லோகநாதன் மகன் பார்த்திபன் (வயது 26) என்பவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்