அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகம் அளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததும், அவர் முத்தனம்பட்டியை சேர்ந்த வினோத்குமார்( வயது 22) என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.