கரூர் திருமாநிலையூர் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அமராவதி ஆற்றுப்பகுதி அருகே கஞ்சா வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 2 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர் திருமாநிலையூரை சேர்ந்த மனோஜ் குமார் (வயது 23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்ததுடன், கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.