தக்கலை:
கொற்றிக்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரசல்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று காலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கீழ சித்திரங்கோடு பகுதியில் சென்றபோது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து போலீசார் அவரை ேசாதனை செய்தனர். சோதனையில் அவரிடம் 130 கிராம் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த நாராயணன் என்பவரது மகன் பாலசுந்தர் (வயது21) என்பதும், தக்கலையில் பொக்லைன் எந்திர டிரைவராக வேலை செய்து கொண்டு அதிக பணம் சம்பாதிப்பதற்காக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.