கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-04 19:33 GMT

முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தருவை பஸ் நிறுத்தம் அருகே மேலப்பாளையம் காஜா நாயகம் தெருவை சேர்ந்த முகமது நாசர் (வயது 29) என்பவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜன் வழக்குப்பதிவு செய்து முகமது நாசரை கைது செய்தார். அவரிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்