கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-19 19:02 GMT

கரூர் அருகே உள்ள ஆத்தூர் பகுதியில் கஞ்சா வைத்து விற்பனை செய்யப்படுவதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை செய்தனர். அப்போது ஆத்தூர் பஸ் நிலையம் அருகே கஞ்சா வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 1200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய திருக்காம்புலியூரை சேர்ந்த விக்னேஸ்வரன் (26) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்