ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். ஆறுமுகநேரி சந்தை அருகே சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. விசாரணையில் அவர் ஆறுமுகநேரியை சேர்ந்த சூர்யா (வயது 20) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.