கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்

Update: 2023-09-13 19:30 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் சீனியாபுரம் விளக்கு அருகே பாலத்தில் வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் கணேசனுக்கு கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சோதனை நடத்தினா். அப்போது கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மரியோ லியோஜாம்சன் (வயது 28) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்