கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-23 19:36 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் வி.களத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வி.களத்தூர் கல்லாற்று பாலத்தின் அருகே மறைவான இடத்தில் கஞ்சா பொட்டலங்களை விற்று கொண்டிருந்த வண்ணாரம்பூண்டியை சேர்ந்த பச்சைமுத்து (வயது 25) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 20 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்