போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

கோவையில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-16 18:45 GMT


கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் நேற்று பெரியக்கடை வீதி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுகொண்டு இருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர் தெற்கு உக்கடத்தை சேர்ந்த சங்கர் கணேஷ் (வயது 23) என்பதும், கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா மற்றும் 15 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்