நர்சுகளை பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபர் கைது

ஆலங்குடியில் நர்சுகளை பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-29 19:44 GMT

ஆலங்குடி அருகே உள்ள கே.வி.எஸ். தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 22). இவர் கடந்த 26-ந் தேதி விபத்து ஒன்றில் கை எலும்பு முறிவு ஏற்பட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த நர்சுகள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த ராமகிருஷ்ணன் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து டாக்டர் அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தார். பின்னர் அவரை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்