நர்சின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்ட வாலிபர் கைது

நர்சின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்ட வாலிபர் கைது

Update: 2022-08-17 14:53 GMT

கோவை

காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் பழிவாங்குவதற்காக நர்சின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்.

ஆபாசமாக சித்தரிப்பு

கோவை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 24 வயது பெண் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-

நான் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வருகி றேன். இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தை பார்த்துக் கொண்டு இருந்த போது யாரோ மர்ம நபர் எனது புகைப்படத்தை பதிவேற்றம் செய்து இருந்தார்.

உடனே நான் அதற்குள் சென்று பார்த்தபோது எனது புகைப்படங் களை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றம் செய்யப்பட்டு, ஆபாசமான வாசகங்களும் எழுதப்பட்டு இருந்தன. எனவே எனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மில்தொழிலாளி கைது

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர். இதில் கோவை மாவட்டம் தெக்கலூரை சேர்ந்த மில் தொழிலாளி சதீஷ் (வயது 26) என்பவர் தான் இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்டது தெரியவந்தது. உடனே போலீசார் சதீசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சதீஷ் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

தனியார் மில்லுக்கு வேலைக்கு செல்லும் போது சதீசுக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் தீவிரமாக காதலித்து வந்தனர். ஆனால் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சதீசின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. எனவே அந்த இளம்பெண் அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்தார்.

பழிவாங்க முயற்சி

இந்த நிலையில் சதீஷ், அந்த இளம்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். அதை ஏற்க அந்த இளம்பெண் மறுத்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ் அந்த இளம்பெண்ணை பழிவாங்குவதற்காக, காதலித்த போது இளம்பெண்ணுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து (மார்பிங்) பதிவேற்றம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

----

Reporter : J.JOSEPH_Staff Reporter Location : Coimbatore - Coimbatore

Tags:    

மேலும் செய்திகள்