திங்கள்சந்தை:
இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்மூர்த்தி தலைமையில் போலீசார் இரணியல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இரணியல் சந்திப்பு அருகே வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தபோது அவர் தூத்துக்குடி மாவட்டம் சின்னான்குளம் என்ற இடத்தை சேர்ந்த ஜார்ஜ்துரை (வயது26) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை பரிசோதித்த போது அவரிடம் 300 கிராம் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடனே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து ஜார்ஜ் துரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.