கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

திருவண்ணாமலையில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-05 12:03 GMT


திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் மணலூர்பேட்டை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார்.

அவரை போலீசார் சோதனை செய்தபோது அவரிடம் 10 கிராம் கஞ்சா மற்றும் 10 லிட்டர் சாராயம் இருந்தது.

விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் 10-வது தெருவை சேர்ந்த பாலச்சந்தர் என்ற விமல் (வயது 21) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா, சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்