தந்தையை தாக்கிய வாலிபர் கைது
வீட்டுமனையை எழுதி தர மறுத்த தந்தையை தாக்கிய வாலிபர் கைது
செஞ்சி
செஞ்சி அருகே உள்ள சிறுணாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி(வயது 63). இவரது மகன் ஸ்ரீதர்(32) தனது தந்தை பெயரில் உள்ள வீட்டு மனையை தனது பெயருக்கு எழுதி தருமாறு கேட்டாராம். ஆனால் இதற்கு மறுத்த ராஜாமணியை அவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.