வாலிபர் தற்கொலை

பெரியகுளம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-20 19:00 GMT

பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் வீரபாண்டியன் (வயது 25). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.. இதற்காக அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். வயிற்று வலி அதிகரித்ததால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள ஒரு அறையில் வீரபாண்டியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்