வாலிபர் தற்கொலை

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-03 19:50 GMT

திசையன்விளை:

உவரி அருகே வெம்மணங்குடியை சேர்ந்த லிங்கம் மகன் இசக்கிமுத்து (வயது 22). இவர் ேகாவையில் உள்ள ஸ்வீட்ஸ் கடையில் வேலை செய்துவந்தார். கோவில் கொடை விழாவிற்காக ஊருக்கு வந்த அவர் பின்னர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளர். அவரது தாயார், வேலைக்கு செல்லும்படி அறிவுறுத்தினார். இதனால் மனவேதனை அடைந்த இசக்கிமுத்து தோட்டத்திற்கு சென்று அங்கு முருங்கைக்கு அடிக்கும் பூச்சிகொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இசக்கிமுத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்