ஈத்தாமொழி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

ஈத்தாமொழி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து ெகாண்டார்.

Update: 2022-05-28 17:50 GMT

ஈத்தாமொழி,

ஈத்தாமொழி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து ெகாண்டார்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

காதல் திருமணம்

ஈத்தாமொழி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட வடக்கு சூரங்குடி புதுத்தெருவைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது35). இவரும் நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த விஷ்ணு தேவி (32) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு வயதில் மேனகா ஆஷா என்ற பெண் குழந்தை உண்டு.

பாக்கியராஜ் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று விஷ்ணு தேவியின் மாமனார் ரேஷனில் பொருட்கள் வாங்க ரேஷன் கார்டு கேட்டதாக தெரிகிறது. இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தீக்குளித்தார்

இதில் மனவேதனை அடைந்த விஷ்ணு தேவி தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது விஷ்ணு தேவி உடல் முழுவதும் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விஷ்ணு தேவியின் தந்தை மணி ஈத்தாமொழி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் ஈத்தாமொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்