வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது பாம்பு கடித்து இளம்பெண் சாவு
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது பாம்பு கடித்து இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின் னம்பேடு ஊராட்சி என்று அழைக்கப்படும் சிறுவாபுரி, மேட்டு தெருவில் வசித்து வருபவர் விவசாயி வாசுதேவன். இவரது மகள் பார்கவி (வயது 23) நர்சிங் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
இரவில் வீட்டுக்குள் புகுந்த விஷ பாம்பு ஒன்று தூக்கிக் கொண்டிருந்த பார்கவியை கடித்தது. வலியால் துடித்த அவரை வீட்டார் உடனடியாக மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே இளம்பெண் பார்கவி இறந்து விட்டதாக கூறினர். இந்தச் சம்பவம் குறித்து தந்தை வாசுதேவன் ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
எனவே, போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளம்பெண் பாம்பு கடித்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.