விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

சிங்காநல்லூரில் காதல் தோல்வி காரணமாக தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-12-22 18:45 GMT

சிங்காநல்லூர்

சிங்காநல்லூரில் காதல் தோல்வி காரணமாக தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தனியார் நிறுவன ஊழியர்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ராஜாளிபேட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் அபிநயா(வயது 21). இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார்.

இந்த நிலையில் அபிநயாவுக்கு கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. தொடர்ந்து அவர், கோவைக்கு வந்தார். பின்னர் சிங்காநல்லூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

விஷம் குடித்து...

இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக காதலர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அபிநயாவிடம் பேசுவதையும், பழகுவதையும் அவரது காதலன் தவிர்த்து வந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக அபிநயா மன உளைச்சலில் இருந்ததுடன், தன்னுடன் தங்கி இருப்பவர்களுடன் சரியாக பேசாமல் இருந்தார். மேலும் வாழ்க்கையில் வெறுப்படைந்த அபிநயா, கடந்த 18-ந் தேதி விடுதியில் தனியாக இருந்தபோது தற்கொலை செய்வதற்காக விஷம் குடித்தார்.

பரிதாப சாவு

வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்த அவரை, அந்த அறையில் தங்கி இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அபிநயாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி அபிநயா நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் அபிநயாவின் செல்போனை கைப்பற்றி, அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு யாருடன் பேசினார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்