ரூ.30 கோடியில் தொழில்நுட்ப பூங்கா கட்டுமான பணி-ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆய்வு
ரூ.30 கோடியில் தொழில்நுட்ப பூங்கா கட்டுமான பணியை நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
வேலூர்
ரூ.30 கோடியில் தொழில்நுட்ப பூங்கா கட்டுமான பணியை நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
வேலூர் அப்துல்லாபுரத்தில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் தொழில்நுட்ப பூங்கா கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
நான் சட்டமன்றத்தில் அணைக்கட்டு தொகுதியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும் என பலமுறை பேசி உள்ளேன். அதன் அடிப்படையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில்நுட்ப பூங்கா கட்ட ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். இதன் கட்டுமான பணிகள் 5 ஏக்கரில் 55 ஆயிரம் சதுரஅடியில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகள் 10 மாதத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பின்பு இரண்டாவது பகுதி கட்டுமான பணிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்வார் என எதிர்பார்க்கிறோம். இந்த தொழில்நுட்ப பூங்காவில் அணைக்கட்டு தொகுதியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது வேலூர் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மு.பாபு, தி.மு.க.ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். முன்னதாக அங்கிருந்த 100 நாள் தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதை தொடர்ந்து நரசிங்கபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகளை ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் தி.மு.க.ஒன்றிய செயலாளர்கள் குமார பாண்டியன், வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.