ரூ.34½ கோடியில் தொழில் நுட்ப மையம்

ஜமுனாமரத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34½ கோடியில் தொழில் நுட்ப மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Update: 2023-07-14 13:43 GMT

ஜமுனாமரத்தூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.34 கோடியில் 65 லட்சம் மதிப்பீட்டில் 4.0 தொழில்நுட்ப மைய அமைக்கப்பட்டு உள்ளது.

இதனை  சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து ஜமுனாமரத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொழில் நுட்ப மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஜெயசங்கர், ஒன்றியக்குழு தலைவர் ஜீவாமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் நடேசன் உள்பட அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்