விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

கோவில்பட்டியில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-06-25 16:37 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜ் ஏற்பாட்டில், சிந்தலக்கரை கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை, அட்மா மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ், முதல்-அமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு தொழில் நுட்ப பயிற்சி நடந்தது. விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். துணை வேளாண்மை அலுவலர் தாணுமாலையன் வரவேற்றார்.

மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார். ஓய்வு பெற்ற வேளாண்மை இணை இயக்குனர்கள் சீனிவாசன், சுப்பராஜ் ஆகியோர் கோடை உழவு, தரமான விதை தேர்வு, விதை நேர்த்தி, அரசின் உழவன் செயலியின் செயல்பாடுகள் குறித்து பேசினார்கள். உதவி வேளாண்மை அலுவலர் பாக்கியலட்சுமி, கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசினார். பயிற்சி ஏற்பாடுகளை மேலாண்மை அலுவலர் காயத்ரி, அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாலமோன் நவராஜ் பொற்செல்வன், உதவி தொழில் நுட்ப மேலாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்