விடுதலை சிறுத்தைகள் கட்சி பேனர் கிழிப்பு இரு தரப்பினர் சாலை மறியல்

வாணியம்பாடி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பேனர் கிழிக்கப்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினர் சாலை மறியல் செய்தனர். மேலும் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது.

Update: 2023-04-10 18:25 GMT

பேனர் கிழிப்பு

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோவில் பகுதியில் நேற்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கரின் 132-வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நீலச்சட்டை பேரணி நடத்துவது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான சுவற்றில் பேனர் ஒட்டப்பட்டு இருந்தது. இதனை மர்மநபர்கள் யாரோ கிழித்து உள்ளனர். இதனை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் நேற்று காலை 8 மணிக்கு பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புத்துக்கோவில் பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி மதியம் 2 மணி அளவில் கிழிக்கப்பட்ட பேனரை அகற்றிவிட்டு மீண்டும் அதே இடத்தில் பேனர் ஒட்ட அனுமதி அளித்ததுடன், பேனர் கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியலை கைவிட்டனர்.

சாலை மறியல்

இதனை தொடர்ந்து அங்கு புதிய பேனர் மீண்டும் ஒட்டப்பட்டது. இந்த நிலையில் பேனர் கிழிப்பு தொடர்பாக புத்துக்கோவில் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 27), கவுதமன் (26) ஆகிய இரண்டு பேரை அம்பலூர் போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதுபற்றி தகவல் கிடைத்த புத்துக்கோவில் கிராம மக்கள் ஒன்று திரண்டு புத்துக்கோவில் சர்வீஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

கோவில் உள்ள பகுதியிலும், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுவற்றிலும், ஊருக்குள்ளும் எந்தவித பேனரும், போஸ்டரும் ஒட்டக்கூடாது எனவும், கைது செய்யப்பட்ட இரண்டு பேரை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே.ராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன்ராஜ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

போஸ்டர் ஒட்ட தடை

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் இரவு 9 மணி வரையில் கலைந்து செல்லாமல் இருந்தனர். இதனைத் தொடர்ந்து நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பேனரை அகற்றுவதற்கான பணியில் ஈடுபட்டார். தாசில்தார் முன்னிலையில் வருவாய்த்துறையினரும், போலீசாரும் போஸ்டர்களை அகற்றினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அங்கு இருந்த தாசில்தார் குமார் மற்றும் வருவாய்த்துறையினரிடம் சம்பந்தப்பட்ட பகுதியில் பேனர், நோட்டீஸ் ஒட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கடைகள் அடைப்பு

மேலும் அங்கிருந்த வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜன் உள்ளிட்ட போலீசாரிடம் சம்பந்தப்பட்ட பகுதியில் உடனடியாக வெள்ளை அடித்து அங்கு தடை செய்யப்பட்ட பகுதி எனவும், பேனர்கள் எதையும் ஒட்டக்கூடாது எனவும் எழுதக்கோரி அவர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் புத்துகோவில் பகுதியில் பதட்டம் நிலவியதால் மாலை 7 மணி முதல் அனைத்து கடைகளும் மூடப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோவில் பகுதியில் நேற்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கரின் 132-வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நீலச்சட்டை பேரணி நடத்துவது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான சுவற்றில் பேனர் ஒட்டப்பட்டு இருந்தது. இதனை மர்மநபர்கள் யாரோ கிழித்து உள்ளனர். இதனை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் நேற்று காலை 8 மணிக்கு பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புத்துக்கோவில் பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி மதியம் 2 மணி அளவில் கிழிக்கப்பட்ட பேனரை அகற்றிவிட்டு மீண்டும் அதே இடத்தில் பேனர் ஒட்ட அனுமதி அளித்ததுடன், பேனர் கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியலை கைவிட்டனர்.

சாலை மறியல்

இதனை தொடர்ந்து அங்கு புதிய பேனர் மீண்டும் ஒட்டப்பட்டது. இந்த நிலையில் பேனர் கிழிப்பு தொடர்பாக புத்துக்கோவில் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 27), கவுதமன் (26) ஆகிய இரண்டு பேரை அம்பலூர் போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதுபற்றி தகவல் கிடைத்த புத்துக்கோவில் கிராம மக்கள் ஒன்று திரண்டு புத்துக்கோவில் சர்வீஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

கோவில் உள்ள பகுதியிலும், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுவற்றிலும், ஊருக்குள்ளும் எந்தவித பேனரும், போஸ்டரும் ஒட்டக்கூடாது எனவும், கைது செய்யப்பட்ட இரண்டு பேரை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே.ராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன்ராஜ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

போஸ்டர் ஒட்ட தடை

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் இரவு 9 மணி வரையில் கலைந்து செல்லாமல் இருந்தனர். இதனைத் தொடர்ந்து நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பேனரை அகற்றுவதற்கான பணியில் ஈடுபட்டார். தாசில்தார் முன்னிலையில் வருவாய்த்துறையினரும், போலீசாரும் போஸ்டர்களை அகற்றினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அங்கு இருந்த தாசில்தார் குமார் மற்றும் வருவாய்த்துறையினரிடம் சம்பந்தப்பட்ட பகுதியில் பேனர், நோட்டீஸ் ஒட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கடைகள் அடைப்பு

மேலும் அங்கிருந்த வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜன் உள்ளிட்ட போலீசாரிடம் சம்பந்தப்பட்ட பகுதியில் உடனடியாக வெள்ளை அடித்து அங்கு தடை செய்யப்பட்ட பகுதி எனவும், பேனர்கள் எதையும் ஒட்டக்கூடாது எனவும் எழுதக்கோரி அவர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் புத்துகோவில் பகுதியில் பதட்டம் நிலவியதால் மாலை 7 மணி முதல் அனைத்து கடைகளும் மூடப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்