உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

Update: 2023-04-20 16:02 GMT


திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விடுதியில் தங்கி படித்த பிளஸ்-1, பிளஸ்-2 மாணவிகளுக்கு அடுத்த உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி ரவிச்சந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

திருச்சியை சேர்ந்த எம்.எம்.டி. அன்ட் நர்ச்சர் அமைப்பை சேர்ந்த இனியன், பிரதாப் ஆகியோர், மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பு குறித்த விவரம், எந்தெந்த படிப்புகளுக்கு என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளது என்பது குறித்து விளக்கி கூறினார்கள். மாணவ-மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்கள். கடும் முயற்சியுடன் செயல்பட்டால் குறிக்கோளை அடைய முடியும் என்று அறிவுறுத்தினார்கள். ஒவ்வொருவரும் என்னென்ன படிக்க விரும்புகிறீர்கள் என்றும் கேட்டு அதற்கு தேவையான வழிமுறைகளையும் எடுத்துக்கூறினார்கள். இதில் திரளான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்