கருப்புப்பட்டை அணிந்து பணியாற்றிய ஆசிரியர்கள்
கருப்புப்பட்டை அணிந்து ஆசிரியர்கள் பணியாற்றினர்.
தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் கீழ்நம்பிபுரம் தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களை தாக்கிய செயலை கண்டிக்கும் வகையிலும், கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் சட்டம் இயற்றக்கோரியும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் கருப்புப்பட்டை அணிந்து பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று திருச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் முன்னேற்ற சங்க உறுப்பினர்கள் கருப்புப்பட்டை அணிந்து பணியாற்றினார்கள். மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் இனி வருங்காலத்தில் நிகழாமல் பணிப்பாதுகாப்பை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.