மாணவர்கள் முன்னிலையில் தாக்கிக்கொண்ட ஆசிரியர்கள்
ஆலங்காயம் அருகே பள்ளியில் மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியா்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பூங்குளம் கிராமத்தை அடுத்த பலப்பநத்தம் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. அங்கு, பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர் திருப்பத்தூர் ஏழருவியை அடுத்த புதுபூங்குளம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் 2 ஆசிரியர்களை வாட்ஸ் அப்பில் தரக்குறைவாக விமர்சித்து, அவதூறு செய்தி பரப்பியதாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரம் அடைந்த மேற்கண்ட 2 ஆசிரியர்களும் பலப்பநத்தம் பள்ளிக்கு நேரில் சென்றனர். இருவரும், அங்கிருந்த மாணவர்கள் முன்னிலையில் அவதூறு பரப்பிய ஆசிரியரை தகாத வார்த்தைகளால் பேசி, வகுப்பறையில் இருந்த மேஜைகளை கையால் ஓங்கி அடித்தும் கடுமையான வார்த்தைகளால் ேபசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை இருவரும் சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.