ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-12-10 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியை அடுத்துள்ள இனாம் மணியாச்சி சந்திப்பில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெறக்கோரியும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கலை உடையார், மாவட்ட செயலாளர்கள் சிவக்குமார், கஜேந்திர பாபு, மாவட்ட தலைவர் சீனி, மாநில பொது செயலாளர் மயில், புரவலர் ஜனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்ட பொருளாளர் ஜெயசீலி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்