ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திய ஆசிரியர் கூட்டமைப்பின் புதுக்கோட்டை மாவட்ட கிளை சார்பில் புதுக்கோட்டையில் அண்ணாசிலை அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜீவன்ராஜ் தலைமை தாங்கினார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.