ஆசிரியர் பேரவையினர் காத்திருப்பு போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆசிரியர் பேரவையினர் காத்திருப்பு போராட்டத்தை வருகிற 12-ந்தேதி நடத்துகிறார்கள்

Update: 2022-11-26 21:38 GMT

அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் பாபு, மாநில துணை செயலாளர் ஜான் துரைச்சாமி ஆகியோர் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை. தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியதை மீறி ஏற்கனவே ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உள்ளிட்ட பணப்பலன்களையும் நிறுத்திவிட்டது. பழைய ஓய்வூதிய திட்டத்தையும் அமல்படுத்தவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் அகவிலைப்படி, சரண்டர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அதையும் நிறுத்திவிட்டார்கள்.

ஏற்கனவே வழங்கப்பட்ட அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும். 2004-ம் ஆண்டு தொகுப்பூதியத்தில் பணி அமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு 2006-ம் ஆண்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது. அதுவரை அவர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தையும் பணிக்காலமாக கணக்கெடுக்க வேண்டும். கோர்ட்டுகளில் நடக்கும் வழக்குகளை கவனிக்க கல்வி அலுவலங்களில் சட்ட வல்லுனர் குழு அமைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை எல்லாம் வலியுறுத்தி வருகிற 12-ந்் தேதி நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்