எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடக்கோரி ஈரோட்டில் ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்

எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடக்கோரி ஈரோட்டில் ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்

Update: 2023-09-11 22:26 GMT

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில மகளிர் அணி செயலாளர் ரமாராணி தலைமை தாங்கினார். டிட்டோ ஜாக் அமைப்பின் மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சரவணன், மணி, கோபாலகிருஷ்ணன், அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் வி.எஸ்.முத்துராமசாமி கலந்துகொண்டு பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பி.எட். பயிற்சி மாணவர்களை பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வுக்கு அனுமதிப்பதை கைவிட வேண்டும். ஆசிரியர்களுக்கு தேவையற்ற பணிச்சுமையை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் கல்வித்திறனை பாதிக்கும், எண்ணும் எழுத்தும் திட்டத்தை முழுவதும் கைவிட வேண்டும். ஈ.எம்.ஐ.எஸ். பதிவேற்றம் செய்யும் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையொட்டி ஆசிரிய, ஆசிரியைகள் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் வேலுசாமி, சண்முகம், பொன்னுசாமி, பழனிசாமி, தங்கராஜ், ரஞ்சிதம், வீரக்குமார் உள்பட ஆசிரிய-ஆசிரியைகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்