ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கீழப்பாவூர் வட்டார உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2022-10-07 18:45 GMT

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் சரகம் வினைதீர்த்தநாடார்பட்டி காமராஜ் நினைவு இந்து நடுநிலைப்பள்ளியில் பணிபுரிந்து வந்தவர் ஆசிரியை சந்திரகலா. இவருக்கு பணிநிரவல் அடிப்படையில் 30-9-2022 அன்று மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவை ஏற்று, நிர்வாகியால் பணி விடுப்பு வழங்கப்பட்டு, ஆசிரியை சந்திரகலாவை ஆரியங்காவூர் இந்து தொடக்கப்பள்ளியில் பணிபுரிய ஆணை வழங்கப்பட்டது. ஆனால் அந்த பள்ளி நிர்வாகி, இந்த உத்தரவை ஏற்க மறுத்து ஆசிரியையை பணிஏற்பு செய்யவிடாமல் திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. தற்போது ஆசிரியை சந்திரகலா பாவூர்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூர் வட்டார தொடக்கக்கல்வி அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக காத்திருந்து வருகிறார்.

இதுதொடர்பாக கல்வித்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி தொடக்க கல்வி அலுவலர் நேற்று மாலை வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அந்த ஆசிரியையின் பணி பாதுகாப்பு நலன் கருதி, கீழப்பாவூர் வட்டார கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொருளாளர் அம்பை கணேசன் தலைமையில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் தென்காசி மாவட்ட தலைவர் ராஜசேகர், செயலாளர் தங்கதுரை, ஒன்றிய தலைவர் ராஜதுரை, செயலாளர் செல்வன், பொருளாளர் அகஸ்டஸ் ஜான் மற்றும் ஆசிரியர்கள், ஒன்றிய மகளிர் அணி ஆசிரியை அருள்மதி உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது. 

Tags:    

மேலும் செய்திகள்