ஆசிரியர்கள் தமிழில்தான் கையொப்பமிட வேண்டும் -பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

ஆசிரியர்கள் தமிழில்தான் கையொப்பமிட வேண்டும் -பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.

Update: 2023-07-27 21:18 GMT

சென்னை,

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அனைத்து இடங்களிலும் தங்கள் பெயர்களை எழுதும் போதும், கையெழுத்திடும் போதும் கண்டிப்பாக தமிழிலேயே கையெழுத்திட வேண்டும் என்று 2021-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணையை பிறப்பித்தது.

அந்த அரசாணையை பின்பற்றும் வகையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை, அதனை சார்ந்த அனைத்து கல்வித் துறை அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் அரசாணையை செயல்படுத்தும் விதமாக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் அதிகாரிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்பட அனைவரும் வருகைப்பதிவு மற்றும் இதர ஆவணங்களில் தமிழில்தான் கையொப்பமிட வேண்டும். மேலும், மாணவர்களையும் தமிழில் பெயர் எழுதவும், கையொப்பமிட அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்