ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

சோளிங்கரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-11-17 17:24 GMT

வட்டார கல்வி அலுவலர் ஆசிரியர்களை தரைக்குழுவாக பேசுவதாகவும், பள்ளிகளுக்கு ஆய்வு நடத்த செல்லும்போது பெண் தலைமை ஆசிரியைகளை மிரட்டுவதாகவும் கூறி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சங்கம் சார்பில் சோளிங்கர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் மனோகுமார், வட்டாரப் பொருளாளர் அருள் நற்றேனரசி, மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் எஸ்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அமர்நாத், கிருஷ்ணன், பொதுக்குழு சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள்.

அப்போது வட்டார கல்வி அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இடமாற்றம் செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார துணைத் தலைவர் கவுதமன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்