ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வரக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்றுமாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் தர்மராஜன் வரவேற்றார். இதில் மாநில துணைச் செயலாளர் ஜுலியஸ், மாவட்ட செயலாளர் குழந்தைசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் துரைப்பாண்டி, மாவட்ட பொருளாளர் நாகராஜன் ஆகியோர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை முற்றிலும் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக முன்னுரிமைப்படி ஆசிரியர் நியமனங்களை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.