ஓமலூர் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து ஆசிரியைக்கு கணவர் மிரட்டல் போலீசார் விசாரணை

ஓமலூர் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து ஆசிரியைக்கு கணவர் மிரட்டல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-07-08 19:48 GMT

ஓமலூர்

ஓமலூர் ரோஜா நகர் பகுதி சேர்ந்தவர் மாலதி (வயது 35). இவர் பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் ஓமலூர் போலீசில் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

ஆர்.சி.செட்டிபட்டி பகுதியை சேர்ந்த மணிகுமார் என்பவர் என்னை காதலித்து ஏமாற்றி 3-வது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாத்தியம்பட்டியைச் சேர்ந்த ரோஜா என்பவருடன் எனது கணவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறோம். கடந்த 28-ந்தேதி மணிகுமார் எனக்கு போன் செய்து திட்டினார். மேலும் கான்பரன்சிங் அழைப்பில் வந்த ரோஜாவும் என்னை திட்டினார். கடந்த 2 ஆண்டுகளாக போனில் தொடர்பு கொண்டு பேசும் எனது கணவர் விவாகரத்து வாங்கி கொள்ளும்படி திட்டி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி இரவு குடிபோதையில் மணி குமார் எனது தாயார் வீட்டுக்கு வந்தார். அங்கிருந்த என்னிடம் மீண்டும் தகராறு செய்து 4-வதாக ரோஜாவை திருமணம் செய்து கொள்ள போவதாக கூறி கட்டையால் என்னை தாக்கினார். தடுக்க வந்த எனது தாயாரையும் தாக்கினார். இதில் நான் காயமடைந்து ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளேன். எனது கணவர் மணிகுமார் மற்றும் ரோஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது புகாரில் கூறி இருந்தார். அதன்பேரில் மணிக்குமார், கள்ளக்காதலி ரோஜா ஆகியோர் மீது ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  .

Tags:    

மேலும் செய்திகள்