ஆசிரியர் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
கள்ளக்குறிச்சியில் ஆசிரியர் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் தனியார் ஐ.டி.ஐ.கட்டிடத்தில் தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொறுப்பாளர் சம்பத்ராஜன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் அய்யாதுரை, ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமத்ரபி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் ரத்தினகுமார் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்கள் போக மீதமுள்ள 2 ஆயிரம் பி.எட். பட்டதாரிகள் மற்றும் 1,500 இடைநிலை டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு பள்ளிகளில் பணி நியமனம் வழங்க வேண்டும், கடந்த 15 ஆண்டுகளாக பட்டதாரிகளும், டிப்ளமோ ஆசிரியர் கல்வியியல் முடித்தவர்கள் காத்து இருப்பதாகவும், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் உத்தரவின்படி 23-8-2010-க்கு முன் நியமன நடவடிக்கை தொடங்கியவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் விலக்கு அளித்து அவர்களை பணி நியமனம் செய்யவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் ஸ்ரீதர், கணபதி, விருத்தம்மாள், புஷ்பநாதன், மகேந்திரன், செந்தில்குமார், குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.