ஆசிரியர் தினம்-கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்
சிவகங்கையில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் தின விழா மற்றும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது.
சிவகங்கையில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தி விழாவில் மாணவ-மாணவிகள் மாறுவேடம் அணிந்து அசத்தினர்.
சிவகங்கை
சிவகங்கை சுப்ரீம் அரிமா சங்கத்தின் சார்பில் சுவாமி விவேகானந்தா உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.விழாவிற்கு பள்ளி நிர்வாகி சங்கரன் தலைமை தாங்கினார். சுப்ரீம் அரிமா சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகன், சிவகங்கை தலைவர் ஜான் பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் அரிமா பிரபாகரன், சுப்ரீம் அரிமா சங்கத்தின் செயலாளர் சுந்தரபாண்டி பொருளாளர் பாஸ்கரன், துணைத் தலைவர் ஜவகர், தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன், முருகன், மனோகரன் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் முரளிதரன் நன்றி கூறினார்
சோழபுரம், ஸ்ரீரமண விகாஸ் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர். ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன் மற்றும் தலைமை ஆசிரியர் கணேஷ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சிவகங்கை ஸ்ரீ பாலமுருகன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மற்றும் சாய் பாலமந்திர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.விழாவில் பள்ளி நிர்வாகி. எஸ்.கே.எஸ். குமார் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, துணைத் தலைவர் இந்தியன் செந்தில், தி.மு.க. நகர அவைத்தலைவரும் காந்திமதி நகை மாளிகை உரிமையாளருமான சிவக்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு வந்த அனைவரையும் உதவி தலைமை ஆசிரியர் அன்பு வரவேற்றார். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை கவுரவித்து பொன்னாடை போர்த்தினர்.
சிங்கம்புணரி பாரிவள்ளல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. பள்ளியின் தலைவர் வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம் வாழ்த்துக்களுடன் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவிற்கு பள்ளியின் முதல்வர் ஷ்யாம் பிராங்கிங் டேவிட் தலைமை தாங்கினார். பள்ளியின் மேலாளர் கிருஷ்ணன், சரவணன், உடற்கல்வி ஆசிரியர் சூரியபிரகாஷ் உள்ளிட்ட பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
ராதை-கிருஷ்ணர் வேடத்தில் குழந்தைகள்
சிங்கம்புணரி சேவுமூர்த்தி மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்றார். தமிழாசிரியர் பாலமுருகன் ஆசிரியர் தினம் குறித்தும் கிருஷ்ணஜெயந்தி விழா பற்றியும் எடுத்துரைத்தார். குழந்தைகள் பலர் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு வந்திருந்தனர். கோவில்பட்டி விளக்கு அருகே உள்ள குளோபல் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர் தின விழா மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு பள்ளி தாளாளர் காந்தி தலைமை தாங்கினார்.பள்ளியின் இயக்குனர்கள் ராஜமூர்த்தி, பிரசன்னா, உமாமமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வைத்தனர். பள்ளியின் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு ஏற்பாடுகளை பள்ளியின் இயக்குனர்கள் ராஜமூர்த்தி, பிரசன்னா, உமா மகேஸ்வரி செய்தனர்.