பள்ளியில் ஆசிரியர் தினவிழா
ஆழ்வார்திருநகரி இந்து பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு பள்ளியில் பயிலும் 50 மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமசாமி நிதி உதவி அளித்து, பொது நூலகத்தில் உறுப்பினராக சேர்த்தார். இதற்கான நிதியை ஆழ்வார்திருநகரி கிளை நூலகர் லட்சுமணகுமார் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் ஜெயலட்சுமி, ராஜாத்தி, கோகிலா, ராஜா, கோமான், ராமானுஜர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.