அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா
கே.வி.குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா நடைபெற்றது.
கே.வி.குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை கெட்சி ஜெபசெல்வி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கவிதா முன்னிலை வகித்தார். விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களின் பேச்சுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், உறியடிப் போட்டிகள், பரிசுகள் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது. ஆசிரியர் சீனிவாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.