இந்திரா நர்சரி, பிரைமரி பள்ளியில் ஆசிரியர் தின விழா
காவனூர் இந்திரா நர்சரி, பிரைமரி பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
திமிரி ஒன்றியம் காவனூரில் உள்ள இந்திரா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி நிர்வாகி எஸ்.சேட்டு தலைமை தாங்கினார். கணக்காளர் லட்சுமி வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்.ரஞ்சித்குமார் (காவனூர்), ஜி.சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏ.சீனிவாசன், காவனூர் வணிகர் சங்க செயலாளர் மோகனரங்கம் ஆகியோர் கலந்துகொண்டு, ஆசிரியர்களின் கல்விப் பணியை பாராட்டி பரிசு வழங்கினர். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.